பிருந்தா காரத்துக்கு ராஜ்யசபா சீட்-ஜெயலலிதாவிடம் சிபிஎம் கோரிக்கை?

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது. அதில் மோசமான தோல்வி மேற்கு வங்கத்தில்தான் கிடைத்தது.
இதன் விளைவு விரைவில் பதவிக்காலத்தை முடிக்கும் மூ்ன்று ராஜ்யசபா உறுப்பினர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் சிக்கியுள்ளது சிபிஎம்.
இந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களான பிருந்தா காரத், சீதாராம் எச்சூரி மற்றும் முகம்மது அமீன் ஆகியோரின் ராஜ்யசபா உறுப்பினர் பவதிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடைகிறது. அதேபோல இடதுசாரி கூட்டணியில் உள்ள ஆர்.எஸ்.பியின் அபானி ராயின் பதவிக்காலமும் முடிவடையவுள்ளது. ஆனால் இந்த நான்கு இடங்களுக்கும் மீண்டும் ஆட்களை அனுப்புவதில் இடதுசாரி கூட்டணிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறைந்தது பிருந்தா காரத் மற்றும் எச்சூரியை மட்டுமாவது எப்பாடுபட்டாவது ராஜ்யசபாவுக்கு அனுப்ப சிபிஎம் தீவிரமாக உள்ளது. காரணம், இந்த இருவரும் டெல்லி வட்டாரத்தில் கட்சியின் முக்கிய முகங்களாக இருப்பதால் இவர்களை இழக்க அக்கட்சி விரும்பவில்லை.
இருப்பினும் தற்போது மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணிக்கு மொத்தம் 62 இடங்களே உள்ளன. இதில் சிபிஎம்முக்கு 40 எம்.எல்.ஏக்களே உள்ளனர். ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க குறைந்தது 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே மேற்கு வங்கத்திலிருந்து ஒரே ஒருவரை மட்டுமே ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியும் என்ற நிலை.
கேரளாவிலிருந்து ஒருவரை அனுப்பலாம் என்றாலும், கேரள இடதுசாரி கட்சிகள் இதுவரை வெளியாட்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டார்கள். எனவே அங்கு பிருந்தாவையோ அல்லது எச்சூரியையோ நிறுத்த முடியாது என்ற இக்கட்டான நிலை.
இதனால் தற்போது தமிழகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது சிபிஎம். தமிழகத்தில் அதிமுக உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் ராஜினாமாவால் ஒரு இடம் காலியாகியுள்ளது. அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியுள்ளதாக தெரிகிறது.
இந்த இடம் கிடைத்தால் தனது மனைவியான பிருந்தாவை நிறுத்தலாம் என்பது பிரகாஷ் காரத்தின் திட்டம். இருப்பினும் இதுகுறித்து ஜெயலலிதா இதுவரை பதில் ஏதும் தரவில்லை என்று தெரிகிறது.
அதேசமயம், சிபிஐயும், இந்த இடத்திற்குக் குறி வைத்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா, கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா நேரில் சந்தித்து இதுகுறித்ததுப் பேசியதாக தெரிகிறது.
இந்த ஒரு இடத்தை ஜெயலலிதா தானே வைத்துக் கொள்வாரா அல்லது இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்யசபாவில் தற்போது அதிமுகவுக்கு ஐந்து எம்.பிக்களே உள்ளனர். அதேசமயம், திமுகவுக்கு 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது கட்சியின் பலத்தைக் கூட்டுவதில் ஜெயலலிதா முன்னுரிமை காட்டுவார் என்றும் கூறப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications