அடுத்த 10 நாட்களுக்கு சென்னையில் தினமும் 2 மணிநேரம் மின்வெட்டு
சென்னை: அடுத்த 10 தினங்களுக்கு சென்னையில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, தமிழகத்தில் மின் நிலைமையைச் சீரமைக்கும் பல பணிகளை மேற்கொண்டு, தமிழகத்தை மின்வெட்டிலிருந்து விடுவித்து வருகிறார்.
தமிழகத்தின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, வடசென்னையில் வள்ளூர் கிராமத்தில் 2500 மெகாவாட் மின்திறன் கொண்ட அனல் மின் நிலையம் நிறுவுவதற்காக, தேசிய அனல் மின் கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு 12.7.2002 அன்று ஏற்படுத்திக் கொண்டது.
பின்னர், இதன் திறன் 3500 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் இந்த அனல் மின் நிலையப் பணிகளை விரைவாக முடிக்க ஆணையிட்டார். அதன் பேரில் இந்த அனல் மின் நிலையத்தின் முதல் அலகு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மின் உற்பத்தியினை துவங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மின் நிலையத்தின் துவக்கப் பணிகளுக்கான மின் தேவைக்காகவும், மின் உற்பத்தி துவங்கிய பின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காகவும் 400 கி.வோ. மின்பாதை தேசிய மின் கட்டமைப்பு கழகம் மூலமாக அமைக்கப் படுகிறது.
இந்த மின்பாதை நெல்லூரிலிருந்து அலமாதி வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் 400 கி.வோ. இருவழிப் பாதையில் இணைக்கப்பட வேண்டும்.இந்தப் பணி நடைபெற்ற பின்னரே, இந்த அனல்மின் நிலையத்தில் மற்ற பணிகளை மேற்கொள்ள இயலும். இந்தப் பணி முடிவடைய 10 நாட்கள் ஆகும்.
இந்தப் பணி நடைபெறும் போது நெல்லூர் வழியாக பெறப்படும் 1000 மெகாவாட் மின்சாரம் தடைபடுவதால் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 21.6.2011 முதல் 30.6.2011 வரை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் முடிவெடுத்தது.
ஏற்கனவே, நிலவி வரும் ஒரு மணி நேர மின் தடையுடன், மேலும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு என்பது மக்களை மிகவும் பாதிக்கும் என்பதால், முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதனைக் குறைக்கும் வழிமுறைகளை ஆராய்வதற்காக 24.6.2011 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின் வெட்டின் தாக்கத்தை குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி, நெல்லூர்-அலமாதி- ஸ்ரீபெரும்புதூர் இருவழி மின் தடத்திலுள்ள (400 கே.வி.) ஒரு தடத்தில் இடைக்கால இணைப்பு ஏற்படுத்த மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் பெரும்பகுதியான மின்சாரம் சென்னைக்கு தொடர்ந்து கிடைக்குமென்று கண்டறியப்பட்டது. இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் மின்பற்றாக்குறை 250 மெகாவாட் அளவிற்கு குறைக்க இயலும் என கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது நிலவி வரும் ஒரு மணி நேர மின் தடையுடன் 27.6.2011 முதல் 7.7.2011 வரை, 10 நாட்களுக்கு மட்டும், கூடுதலாக பகலில் ஒரு மணி நேரமும், 28.6.2011 மற்றும் 6.7.2011 ஆகிய 2 நாட்களில் மட்டும் இரவில் ஒரு மணி நேரமும் சுழற்சி முறையில் மின்நிறுத்தம் செய்யப்பட திட்டமிடப்படுள்ளது.
பகல் நேரங்களில் மின் தடை செய்யப்பட்ட இடங்களில் இரவு நேரங்களில் மின்தடைசெய்யப்பட மாட்டாது. ஒரே இடம் இரண்டு முறை இரவு நேரங்களில் பாதிக்கப்படாது. (28.6.2011, 6.7.2011).
மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் மின்தடை விவரம் வருமாறு:
தேதி: 27.6.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
இல்லை
28.6.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
29.6.2011 முதல் 5.7.2011 வரை:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
இல்லை
6.7.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
7.7.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை):
இல்லை
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications