சென்னையில் 47 போலீ்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
சென்னை: சென்னை நகரில் இன்று ஒரே நேரத்தில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி நியமிக்கப்பட்டார். மாநில உளவுப்பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் தமிழக டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
சென்னையில் போலீஸ் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் எஸ்பிக்களும் மாற்றப்பட்டனர்.
இந் நிலையில் சென்னை போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களாக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களும் மாற்றப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக இன்று 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
18 பேர் சென்னையை விட்டு வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் 200க்கும் மேற்பட்ட சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும், 10 நாட்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications