ராசா மனைவி, சகோதரரிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை:

ஜூலை முதல் வாரத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குழு லண்டன், சிங்கப்பூர், சைப்ரஸ், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்திவிட்டுத் திரும்பியது.
அப்போது கிடைத்த முக்கியத் தகவல்கள் இரண்டாவது துணைக் குற்றப்பத்திரிகையில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.
வருமானவரி அதிகாரிகள் விசாரணை:
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மற்றும் சகோதரர் ராமச்சந்திரனிடம் வருமான வரித்துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரான இவ்விருவரிடமும் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவின் சகோதரர்கள் மற்றும் அவரது உறவினர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள ஆ.ராசாவின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.
இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி மற்றும் ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோரை விசாரணைக்காக திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்ததாக தெரிகிறது.
அதன்படி ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோர் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை 10.35 மணி அளவில் நேரில் ஆஜராக வந்தனர். அவர்களுடன் ராசாவின் அக்காள் மகன் பரமேஸ்குமார், அக்கா மகள், ஆடிட்டர்கள் பிரான்சிஸ், முத்துக்குமாரசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும் வந்திருந்தனர்.
திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள தனி அலுவலகத்தில் வைத்து ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் வருமான வரித்துறை துணை இயக்குனர் ஆல்பர்ட் மனோகரன் மற்றும் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து மாலை வரை நடைபெற்றது.
விசாரணை மேலும் தொடரும்...
விசாரணை குறித்து ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடன் வந்திருந்த ஆடிட்டர்கள் கூறுகையில், "வருமான வரித்துறையினர் வழக்கமாக நடத்தும் விசாரணைதான் வேறு ஒன்றும் புதிதல்ல'' என்றனர்.
வழக்கு தொடர்பாக ராசாவின் உறவினர்களிடமும் வருமான வரித்துறையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையினரின் விசாரணையால் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications