சேலம் அருகே நேருக்கு நேர் மோதிய பஸ்கள்-10 பேர் பலி-20 பேர் காயம்
சேலம்: சேலம் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் 10 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10 மணி அளவில் ஒரு தனியார் பஸ் தர்மபுரிக்கு நோக்கி புறப்பட்டு சென்றது.
அந்த பஸ் சேலம் தீவட்டிப்பட்டி அடுத்த பண்ணப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது, பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு நோக்கி சென்ற ஒரு ஆம்னி பஸ் எதிரே வந்தது.
அப்போது, இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் தர்மபுரி பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 10 பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பஸ்களையும் சேர்ந்த பயணிகள் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது.












Click it and Unblock the Notifications