பிரதமரின் அனைத்து சந்திப்புகளுமே முக்கியமானவையல்ல- பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி கிடுக்கிப் பிடி

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: பிரதமர் நடத்தும் அனைத்துக் கூட்டங்களுமே முக்கியமானவை, ரகசியம் காக்கப்பட வேண்டியவை என்று கிடையாது. எனவே பிரதமரின் சந்திப்பகுள் குறித்த தகவலை ஆர்டிஐ சட்டத்தின் மூலம் யாராவது கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சந்தீப் ஜலன் என்பவர், குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டங்கள் தொடர்பான தகவல்களைத் தருமாறு ஆர்டிஐ மூலம் கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டது.

இதையடுத்து அவர் தலைமை தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகத்திடம் தலைமைத் தகவல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த பிரதமர் அலுவலகம், பிரதமர் பங்கேற்கும் சந்திப்புகள் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்டின் நலன் கருதி அவற்றை வெளியிட முடியாது என்று கூறியிருந்தது.

ஆனால் இதை தலைமைத் தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள உத்தரவில், பிரதமர் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்துமே முக்கியமானவை, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூற முடியாது. எனவே குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரதமர் யாரைச் சந்தித்தார், என்ன மாதிரியான கூட்டம், சந்திப்பு அது என்று கூறுவதில் எந்த பாதுகாப்பு அபாயமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. எனவே அதுகுறித்த தகவலை கோரினால் அதை பிரதமர் அலுவலகம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனவே ஆர்டிஐயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட சில சந்திப்புகளைத் தவிர பிற சந்திப்புகள் குறித்த விவரங்களை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+