கேரள மாணவி பலாத்கார வழக்கில் கேரளா சிபிஎம் நிர்வாகி கைது

Subscribe to Oneindia Tamil

கொல்லம்: கேரளாவில் 18 வயது மாணவி பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அம்மாநிலத்தைச் சேர்ந்த சிபிஎம் நிர்வாகி ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாக எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையிலான 5 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. கேரளா மட்டுமின்றி தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் மாணவி பலாத்கார விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

குமரி மாவட்டம் கண்ணூமாமூட்டைச் சேர்ந்த கான்டிராக்டர் மணிகண்டனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் உள்ளார். இவரை 3 நாள் காவலில் எடுத்து தனிப்படை விசாரித்தது. கண்ணூமாமூட்டில் உள்ள மணிகண்டனின் சொகுசு பங்களாவிலும் சமீபத்தில் சோதனை நடந்தது.

இந்த பங்களாவில் வைத்துதான் மாணவியை மணிகண்டன் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த உயர் அதிகாரிகளுக்கும் மாணவியை விருத்தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவி பலாத்கார வழக்கில் கேரள அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கேரள மாநிலம் மூவாற்றுபுலா அருகேயுள்ள மழுவனூர் மார்க்சிஸ்ட் பிரமுகர் தாமஸ் வர்கீஸ் என்பவரை குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள வர்கீஸ் மார்க்சிஸ்ட் வட்ட செயலாளர் ஆவார். இவரை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+