தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேமுதிக 14.9.2005 அன்று மதுரை மாநாட்டில் மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்டு துவக்கப்பட்டது. பல இலட்சம் உறுப்பினர்களை கொண்டு துவக்கப்பட்ட இயக்கம், அன்றிலிருந்து இன்று வரை பல முக்கிய கட்டங்களைக் கடந்து தமிழ்நாட்டில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
2006இல் நடந்த சட்டமன்றத் தேர்தலையும், 2009இல் நடந்த பாராளுமன்ற தேர்தலையும், இடைக் காலத்தில் நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது.
மக்களின் கோரிக்கைகளுக்காக பல ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது. மக்களுடைய நல்லெண்ணத்தைப் பெற்றதன் மூலம் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் 29 இடங்களில் வெற்றி பெற்று ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக முன்னேறியுள்ளது.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையமும் தே.மு.தி.கவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்று ஆணை பிறப்பித்துள்ளது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மக்களின், குறிப்பாக இளைஞர்களின், சக்தியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வடசென்னை முதல் தென்குமரி வரை ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்ற முழக்கத்தோடு ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 21ஆம் நூற்றாண்டின் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பணியாற்றி வரும் தே.மு.தி.கவின் அரசியல் நோக்கத்தையும், செயல்படும் முறையையும் கண்டு ஆர்வத்தோடு தே.மு.தி.கவில் உறுப்பினர்களாகச் சேர மக்கள் முன் வந்துள்ளனர்.
தே.மு.தி.க. துவங்கிய நாள் முதல் இன்று வரை லட்சக் கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவற்றை முறைப்படுத்தும் வகையிலும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையிலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்பு உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் அனைவரும் மீண்டும் தங்களை உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
1.1.2011க்குப் பிறகு உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் புதுப்பிக்கத் தேவையில்லை. புதிய உறுப்பினர்களை விரைந்து சேர்க்கும் பணியில் கழக மாவட்ட செயலாளர்களும், நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வட்ட, கிளைக் கழக நிர்வாகிகளும் முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
வரும் 31.8.2011க்குள் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு கழக அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்தல், கழக சட்ட திட்டங்களின்படி நடத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக உறுப்பினர்களாக புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களாக சேர்வதற்கும் 5 ரூபாய் கட்டணம் தவறாது செலுத்த வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கும் படிவங்களை தலைமைக் கழகத்திடம் இருந்து டி.டி. செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications