டீஸல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்!
சென்னை: டீஸல், கேஸ், மண்ணெண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்து ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமினழக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் மத்திய அரசு, சாதாரண மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், மண்எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவினால் அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வரும் மத்திய அரசு சற்றும் மக்களை பற்றி சிந்திக்காமல் டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
கடந்த வருடத்தில் மட்டும் 10 முறை பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்றியுள்ள மத்திய அரசு, சாதாரண மக்களின் அரசு என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்துவிட்டது.
ஏற்றியுள்ள டீசல், மண்எண்ணெய், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி தமிழக பா.ஜ.க. மாநிலம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு கண்டன போராட்டங்கள் நடத்தும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications