200 பேருக்கு இரையானேன்-தந்தைதான் முதலில் பலாத்காரம் செய்தார்: கேரள மாணவி

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: தன்னை முதலில் தனது தந்தை தான் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை 200 பேர் வரை சீரழி்த்ததாகவும் கேரள மாணவி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி பலாத்கார வழக்கில் இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் குமரி மாவட்டம் கண்ணுமூட்டை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர். இவரது பெயர் 17-வதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். 3 நாள் போலீஸ் காவல் முடித்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் மாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷாஜி தலைமையிலான தனிப்படை போலீசார் கண்ணுமூட்டில் உள்ள மணிகண்டன் சொகுசு பங்களாவுக்கு அவரை அழைதத வந்து சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர், மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த ஒரு அதிகாரி ஆகியோர் இன்னும் ஓரிரு நாளில் கைது ஆவார்கள் என கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை முடிந்து குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு முதல் முறையாக மாணவி நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறிய தகவல்கள்...

நான் தற்போது 10-ம் வகுப்பு முடித்து விட்டு பிளஸ் 1 செல்ல இருக்கிறேன். முதலில் என் தந்தைதான் என்னை பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டினார். இதனால் பயந்து போன நான் வெளியில் சொல்லவில்லை.

அதன் பிறகு யார், யாரையோ அழைத்து வந்து என்னை பலாத்காரம் செய்ய வைத்தார். சிலர் வரும்போது அவர்கள் முக்கியமானவர்கள். நீ அவர்கள் சொல்படி நடந்து கொள் என்பார். அவர்கள் முக்கிய அதிகாரிகள் என்பது அவர்கள் செல்லும்போதுதான் என்னிடம் கூறிவிட்டுச் செல்வார்கள்.

ஒரு சிலரின் பெயர்கள் தான் தெரியும். மற்றபடி ஆட்களை அடையாளம் காட்ட முடியும். நான் சிறுமி என்று கூட பார்க்காமல் பலர் என்னை பலாத்காரம் செய்தனர்.

200 பேர் வரை என் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். எனக்கு உயர் படிப்பு படிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. தற்போது காப்பகத்தில் என்னை நல்ல முறையில் கவனித்து கொள்கின்றனர் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+