மதிமுக 18ம் ஆண்டு விழா: வைகோவுக்கு போர் வீரன் பரிசு
சென்னை: மதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு போர் வீரன் சிலை நினைவு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மதிமுகவின் 18-ம் ஆண்டு துவக்க விழாவும் மற்றும் அரசியல் பிரகடனம் தொடர்பான பொதுக் கூட்டமும் நடந்தது. இதற்கு மதிமுகவின் நெல்லை மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
மதிமுகவில் இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என்று அழைக்கிறேன். இலங்கை அரசின் இனப்படுகொலை தொடர்பான வீடியோ இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே அரசின் அட்டூழியங்களை வீடியோவில் பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சர்வதேச சட்டப்படி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்றார்.
இந்த பொதுக் கூட்டத்தில் வைகோவுக்கு போர் வீரன் உருவச் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications