எவ்வளவு நன்கொடை கிடைக்கிறது? சாய் அறக்கட்டளைக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்
புட்டப்ர்த்தி: சாய்பாபா அறக்கட்டளையின் நன்கொடை மற்றும் செலவுக் கணக்கு போன்ற விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்குமாறு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் பாபாவின் தனி அறையில் இருந்து ரூ. 11.56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் 307 கிலோ வெள்ளி இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதையெல்லாம் வங்கியில் டெபாசிட் செய்யப்போவதாக அறக்கட்டனை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அடுத்த 2 நாட்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான காரில் ரூ. 35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் நேற்று அறக்கட்டளை உறுப்பினர் சீனிவாசனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அறக்கட்டளை தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக சாய் அறக்கட்டளைக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை விவரம், வளர்ச்சிப் பணிகளுக்காக அறக்கட்டளை செய்த செலவுக் கணக்கு, வங்கி இருப்பு, அறக்கட்டளை உறுப்பினர்களின் நிரந்தர முகவரி, அவர்களது தொழில் போன்ற பல விவரங்களை இன்னும் 10 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று மாலை அறக்கட்டளை உறுப்பினர்களின் அவரசக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அறக்கட்டளைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை எவ்வாறு போக்குவது, ஆந்திர அரசுக்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications