புதுவை சபாநாயகராக சபாபதி போட்டியின்றி தேர்வு: நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுவை: புதுவை சட்டசபை சபாநாயகராக என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சபாபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்.
புதுவை சட்டசபை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் சபாபதி எம்.எல்.ஏ. வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து எதிர்கட்சிகள் தங்களது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கின.
எதிர்கட்சிகள் சுயேட்சை எம்.எல். ஏ. வி.எம்.சி. சிவக்குமாரை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தன. ஆனால் அவரை அணுகியபோது அவர் பல நிபந்தனைகள் விதித்ததால் பொது வேட்பாளர் யோசனை கைவிடப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தன் கட்சி சார்பில் ஒருவரை நிறுத்த தீர்மானித்தது.
இது குறித்து புதுவை எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்டபோது உடன்பாடு எட்டவில்லை. மேலும், சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இவர்களை நம்பி தேர்தல் களத்தில் குதிக்க விரும்பாத காங்கிரஸ் கௌரவமாக போட்டியில் இருந்து பின் வாங்கியது.
வேட்மனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். ஆனால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சபாபதி போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடக்கவிருக்கும் சட்டசபை கூட்டத்தில் வெளியடப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications