ஊழலை வேரோடு கலைய மக்கள் இயக்கம் துவங்குவோம்: புதிய தமிழகம் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

DR Krishnaswamy
சங்கரன்கோவில்: ஊழலை வேரோடு கலைய மக்கள் இயக்கத்தை துவங்குவோம் என்று புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் நடந்தது. கூட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற செப்டம்பர் மாதம் மாநில மாநாடு நடத்துவது, ஊழலை வேரோடு கலைய புதிய தமிழகம் கட்சி சார்பில் மக்கள் இயக்கத்தை துவங்குவது, தென்தமிழகத்தில் கல்வி, தொழில் உள்பட அனைத்து துறைகளிலும் அனைத்து சமுதாயத்தினரும், சமமான வாழ்க்கை பெற்றிடும வகையில் சமூக நல்லிகணக்க குழுக்களை உருவாக்குவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது,

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றோம். அதே போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக 18 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+