கேரளாவில் குடிப்பதற்காக மனைவியை விற்ற கணவர் கைது: வாங்கி கற்பழித்தவருக்கு வலைவீச்சு!
திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்த பணம் இல்லாததால் தனது மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். ரப்பர் வெட்டி எடுக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு குடிப் பழக்கம் உண்டு. இவருக்கும் சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் பிரியா தனக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து ஹோஸ்துர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் எனது கணவன் திருமணம் செய்த நாளில் இருந்தே என்னை உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு வழிகளில் கொடு்மை படுத்தினார்.
சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைபடுத்தினார். பணம் கொடுக்காததால் என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று வி்ட்டார். இதையடுத்து மனோஜ் என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
அவரது மனுவை பரிசீலித்த மாஜிஸ்திரேட் இது குறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அப்பெண்ணின் கணவர் பிரசாத்தை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மானோஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications