காபூல் ஹோட்டலுக்குள் புகுந்து தாலிபான்கள் தாக்குதல்: 21 பேர் பலி- கர்சாய் கண்டனம்
காபூல்: காபூலில் உள்ள ஒரு ஹோட்டலில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்தி்ய தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்டர்கான்டினென்டல் என்னும் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு பெரும்பாலும் வெளநாட்டு பயணிகளும், முக்கிய அதிகாரிகளும் தங்குவர். நேற்று இந்த ஹோட்டலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறி்த்த கருத்தரங்கு நடந்தது. மேலும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணிகளை அந்நாட்டு படைகளிடமே ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு அதிகாரிகள் இந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு தாலிபான் தீவிரவாதிகள் திடீர் என்று ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். உடனே விருந்தினர்கள் அங்கும், இங்கும் ஓடினர். அதற்குள் விவரம் அறிந்த நோட்டோ படை அங்கு வந்து தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது.
இந்த சண்டை இன்று அதிகாலை வரை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் ஹோட்டலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இந்த தாக்குதலில் 9 ஆப்கானிஸ்தானியர்கள், 2 போலீசார் உயிர் இழந்தனர், 18 பேர் காயம் அடைந்தனர். மேலும் இதில் தாலிபான் தீவிரவாதிகள் 9 பேரும் உயிர் இழந்தனர். இதில் துருக்கிய ஏர்லைன் நிறுவனத்தில் விமானியாக இருந்த ஸ்பெயின் நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தொலைபேசி மூலம் இந்த தகவலை தெரிவித்தார். இந்த தாக்குதலை அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார். தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களால் நேட்டோ படைகள் பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் படையிடம் ஒப்படைப்பதை தடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகிவிட்டது என்பதால் அந்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை நேட்டோ படை அந்நாட்டிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications