சேலத்தில் நில அபகரிப்பு: மேலும் ஒரு திமுக நிர்வாகி கைது
சேலம்: சேலத்தில் நில அபகரிப்பு வழக்கில் திமுக நிர்வாகி சிவகுமாரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி அய்யந்திருமாளிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40). பி.எஸ்.என்.எல். ஊழியர். இவரது மனைவி மாதேஸ்வரி.
மாதேஸ்வரி தனது கணவருடன் பணியாற்றும் வெங்கடேசன் (40) என்பவரிடம் சிவதாபுரத்தில் 1/2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு மாதேஸ்வரி திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார். தன் சாவுக்கு வெங்கடேஷ் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில் வெங்கடேஷ் தன்னை இடத்தை காலி செய்யுமாறு மிரட்டியதால் தான் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக எழுதியிருந்தார். இந்த கடிதத்தை கைபற்றிய போலீசார் தற்கொலைக்கு தூண்டியதற்காக வெங்கடேசனை கைது செய்தனர்.
மாதேஸ்வரி தற்கொலை செய்வதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு கன்னங்குறிச்சி போலீசில் நில மோசடி புகார் ஒன்றை கொடுத்தார். அதில் போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்பனை செய்து, தனது கையெழுத்தை போலியாக போட்டு, வெங்கடேசும், சிவதாபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சிவா என்ற சிவக்குமாரும்(40) சேர்ந்து தான் மோசடி செய்தனர் என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கு நீண்ட நாட்களுக்கு பிறது தற்போது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை நேற்று சிவக்குமாரை கைது செய்தார். சிவக்குமார் மாநகராட்சி 22-வது வார்டு திமுக கிளை நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சிவக்குமாரை சேலம் ஜே.எம். எண். 4-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே நில அபகரிப்பு வழ்ககில் 2 திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது 3-வது கைது நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications