முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை-தமிழகத்துடன் பேசத் தயார் என கேரள அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மனிதபிமான அடிப்படையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள சட்டபேரவையில் பாசனத்துறை அமைச்சர் பிஜே ஜோசப் வேண்டுகோள் விடுத்தார்.
கேரள சட்டபேரவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது பாசனத்துறை அமைச்சர் பிஜே ஜோசப் கூறியதாவது,
முல்லை பெரியாறு அணை மிகவும் பலகீனமாக இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனையில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன. இந்த பரிசோதனைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அது முடிந்ததும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இதன் பிறகே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும். அது கேரளாவுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்.
முல்லை பெரியாறு விவகாரத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம் என தமிழக சட்டபேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்கவே கேரளா விரும்புகிறது.
எனவே பேச்சு வார்த்தைக்கு கேரளா எப்போதும் தயாராகவே இருக்கிறது. அணை உடைந்தால் 30 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும்.
எனவே புதிய அணை கட்டுவதற்கு மனிதாபிமான அடிப்டையில் கேரளாவுக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். புதிய அணை கட்டப்பட்டாலும் தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றார் ஜோசப்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications