ஓட்டுப் போட்ட வாக்காளர்கள்லில் விழுந்து நன்றி தெரிவித்த அமைச்சர் கருப்பசாமி

அமைச்சராக பதவியேற்றபோதே படு துடிப்பாக உறுதிமொழியை வாசித்து முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைவரையும் கவர்ந்தவர் கருப்பசாமி. படு வேகமாக அவர் பதவிப்பிரமாண உறுதிமொழியை வாசித்து கலகலப்பூட்டினார்.
இந்த நிலையில், நன்றி சொல்லவே வார்த்தை இல்லையே என்ற பாடல் வரிக்கேற்ப சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் தனக்கு 4வது முறையாக வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களை பிற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து நன்றி சொல்லி தொகுதியை கலக்கி வருகிறார் கருப்பசாமி.
இவர் காலில் விழுவது இது முதல் முறையல்ல. தேர்தல் பிரசாரத்தின்போதே விழுந்து விழுந்துதான் வாக்கு சேகரித்தார். வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து காலில் விழுந்து வாக்கு கேட்டபோது எதிர்கட்சியினர் காலில் விழுந்து வாக்கு கேட்கும் இவர் ஜெயித்த பின், காலை வாரி வி்ட்டு விடுவார் என்று இவரை பார்த்து ஏளனம் செய்தனர். இருந்தாலும் சளைக்காமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார் கருப்பசாமி. இதனால் தொகுதி மக்களும் எதைப் பற்றியும் கவலைபடாமல் கருப்பசாமிக்கு 4வது முறையாக வாய்ப்பு அளித்தனர்.
இந்த வாய்ப்பை வழங்கிய வாக்காளர்களுக்கு அவர் தற்போது தனது நன்றியை காலில் விழுந்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை மட்டு்மி்ன்றி புதிய மாற்றத்தையும் அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications