தமிழக போலீஸ் அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள்: ரியல் எஸ்டேட்டில் முதலீடு
சென்னை: தமிழக காவல்துறை அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தமிழக காவல்துறையில் மொத்தம் 169 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 20 பேர் கோடீஸ்வரர்கள். தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்கள் சொத்து விவர பட்டியலை வெளியிட்டனர். அதில் இருந்து தான் இந்த தகவல் கிடைத்துள்ளது.
இந்த கோடீஸ்வர பட்டியலில் தமிழக செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன ஐ.ஜி. ஏ.கே.விஸ்வநாதன் ரூ.15 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவை அனைத்தும் தன் தாய் மற்றும் மனைவி மூலம் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி போலோநாத், சிபிசிஐடி ஏடிஜிபி ஆர்.சேகர், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரன் ஆகியோர் ரூ.3 கோடிக்கும் மேற்பட்ட சொத்து மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி ரூ. 2.8 கோடி மதிப்புள்ள சொத்துகள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த 4 கோடீஸ்வர அதிகாரிகளும் மாதம் ரூ. 70 முதல் 80 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் வருமானத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர். டிஜிபி போலோநாத்துக்கு டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீடுகள் உள்ளன.
சிபிசிஐடி ஏடிஜிபி சேகருக்கு சென்னை அண்ணா நகரில் ரூ.1.2 கோடி மதிப்பிலும், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரனுக்கு பெசன்ட் நகரில் ரூ.75 லட்சம் மதிப்பிலும் வீடுகள் உள்ளன.
'ஏழை' அதிகாரிகள்!
ஒரு புறம் சில அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துகள் வைத்திருக்க மறுபக்கம் மேற்கு மண்டல ஐஜி பி.சிவனாண்டி தனக்கு சொத்துகள் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல டிஜிபி லத்திகா சரண் தனக்கு வெறும் ரூ. 11 லட்சம் மதிப்பிலான சொத்துக்களே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications