ஊனத்தைக் காட்டி எம்.பி.பி.எஸ். சீட் மறுப்பு: மாற்றுத் திறனாளி மாணவி வழக்கு
மதுரை: உடல் ஊனத்தை காரணம் காட்டி மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாணவி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி வானதி. இடது கை ஊனமுற்றவர். வானதி, தனது குறைபாட்டை பொருட்படுத்தாமல் சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்த மாணவியாக இருந்து வந்தார்.
தனது வலது கையை பயன் படுத்தி விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். ஒரு கையை வைத்தே சைக்கிளும் ஓட்டுகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் தான் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த, மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த வானதி பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1139 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனையடுத்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் ஒதுக்கக் கோரி விண்ணப்பித்தார்.
மேலும், மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 191 பெற்றார். ஆனால் கலந்தாய்வுக்கான பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வானதி தனக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications