சென்செக்ஸ் 83 புள்ளிகள் வீழ்ச்சி
மும்பை: இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 83 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தந. நிறுவனங்களின் காலாண்டு லாப முடிவுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 18,974.96 புள்ளிகளில் தொடங்கியது மாலையில் 83.07 புள்ளிகள் குறைந்து 118,762.80 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்கு சந்தையான நிப்டி 20.2 புள்ளிகள் குறைந்து 5627.2 புள்ளிகளாக நிலை பெற்றது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் சிப்லா, டாட்டா ஸ்டீல்ஸ், மாருதி, ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது.
குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.95 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
பஜாஜ் , பாரத ஸ்டேட் வங்கி வங்கி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ஹிண்டல் கோ, டாட்டா பவர்,ஐடிசி, டிஎல்எப், ஐ.சி.ஐ.சி.ஐ, ஒ.என்.ஜி.சி.ஆர்.காம், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு விலை உயர்வில் கைமாறின.












Click it and Unblock the Notifications