நெல்லை பாஸ்போர்ட் சேவை மையம் துவக்கம்: 256 பேர் விண்ணப்பிப்பு
நெல்லை: நெல்லையில் பாஸ்போர்ட் சேவை மையம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. முதல் நாளில் 256 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.
பொது மக்களுக்கு விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் 77 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் 3 இடங்களிலும், திருச்சி, தஞ்சாவூர், கோவை, மதுரை, நெல்லையிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன.
திருச்சி, தஞ்சாவூர் மதுரையை அடுத்து நான்காவதாக நெல்லையில் பாஸ்போர்ட் சேவை மையம் நேற்று காலை திறக்கப்பட்டது. முதல் நாளான நேற்று விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைனில் பதிவு செய்தனர். இவர்களுக்குரிய பதிவு எண் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களது விண்ணப்பங்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.
இது குறித்து பாஸ்போர்ட் சேவை மைய கண்காணி்ப்பு அலுவலர் மோகன் கூறுகையில்,
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரடியாக பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு வரலாம். முகவரி ஆதாரச் சான்று, கல்விச் சான்று, பாஸ்போர்டுக்கான கட்டணம் ஆகியவற்றை உடன் எடுத்து வரவேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கன் வரிசைப்படி அழைக்கப்பட்டு போட்டோ எடுக்கப்படும். சான்றிதழ்கள் அனைத்தும் ஸ்கேனிங் செய்து சரிபார்க்கப்பட்டு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்யப்படும்.
விண்ணப்பதாரர்களின் போலீஸ் அறிக்கை ஆன்லைன் மூலம் எஸ்.பி. அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இந்த போலீஸ் அறிக்கை மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கிடைத்த அடுத்த மூன்று நாட்களில் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும்.
முதல் நாளான நேற்று மட்டும் 256 பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications