16 வயது சிறுமியை 50க்கும் மேற்பட்டோரிடம் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்
நெல்லை: கொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியல் உறவு கொண்ட செய்தியின் வேகம் குறைவதற்குள் நெல்லையிலும் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது. இந்த சிறுமியை 50 பேரிடம் விபச்சாரத்திற்கு விற்றுள்ளார் ஒரு பெண்.
பாளையங்கோட்டை, ரெட்டியார்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாயை இழந்தவர். தந்தை நோயாளி. அண்ணன் சிறையில் உள்ளார். தம்பி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஜீவா வீட்டின் அருகில் உள்ள ஜெபகூடத்துக்கு சென்றார். அப்போது அங்கு பிரசாரத்துக்கு வந்த மேரி என்பவர் அவரது வீட்டு கஷ்டங்களை கேட்டறிந்தார். தான் உதவி செய்வதாக கூறி செல்போன் எண்ணை கொடுத்துச் சென்றார். சில நாட்களுக்கு பிறகு அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அப்போதுதான் அழைத்து சென்ற பெண்ணின் பெயர் மேரி அல்ல, துரைச்சி என்பதும், அவர் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் சிறுமிக்கு தெரிய வந்தது.
ஒரு வாரம் விருந்தும், ஜெபமுமாக கழித்த துரைச்சி, சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு மருந்து குடோனுக்கு அழைத்து சென்றார். அங்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து 4 பேருக்கு இரையாக்கினார். பின்னர் பாளைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார். சிறுமியுடன் சுத்தமல்லியை சேர்ந்த காயத்ரி என்பவரையும் அனுப்பி பணம் சம்பாதித்தார்.
வாடகை வீட்டில் இவ்வாறு சட்டவிரோதமாக செயல்படுவது வீட்டு உரிமையாளருக்கு தெரிந்து விட்டதால் உடனே வீட்டை மாற்றினார். கடந்த 30 நாட்களுக்குள் 3 வீடுகளுக்கு மாறி விபசார தொழில் நடத்தினார்.
இரண்டாவது வீ்ட்டில் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு விஷயம் தெரிந்து விட அவருக்கும் சிறுமியை இரையாக்கியுள்ளார். இவ்வாறு 50க்கும் மேற்பட்டவர்கள் தன்னை கெடுத்ததாக சிறுமி கூறினார்.
வாடிக்கையாளர்களிடம் தலா ரூ.3000 பெற்று அதில் 1000 ரூபாயை கமிஷனாக எடுத்து கொண்டதாக தெரிவித்தார். அதிகமாக தொல்லை ஆரம்பித்ததால் அங்கிருந்து சிறுமி தப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது உறவினர் கணேசன் கூறுகையில், சிறுமி காணாமல் போனதை மானத்துக்கு அஞ்சி வெளியில் சொல்லவில்லை. ஆனால் அவள் பலராலும் சீர்குலைக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் துணை கமிஷனர் அலுவலகத்து முறையிட சென்றேன். ஆனால் போலீசார் உள்ளே விடவில்லை. இவளை அழைத்து சென்றவர் இதேபோல் பல சிறுமிகளின் வாழ்வை குலைத்துள்ளார். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கேரளாவைப் போல நெல்லையில் நடந்துள்ள இந்த பாலியல் குற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications