மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்வு-பக்தர்கள் அதிர்ச்சி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசன டிக்கெட் கட்டணம் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய அளவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இக் கோவில்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலம் பகுதிகளிலும் இருந்தும் தினசரி பல நூறு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அதிக அளவில் வெளி நாட்டு பயணிகளும் வந்து கோவில் கலைஅம்சம் குறித்து பார்த்து வியந்த வண்ணம் செல்கின்றனர்.
இந்த நிலையில், கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் இதுவரை ரூ 15 மட்டுமே வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை கோவில் நிர்வாகம் திடீரென தற்போது ரூ. 50 ஆக உயர்த்தி உள்ளது.
மேலும், பக்தர்கள் செல்லும் இலவச தரிசன பாதையையும் இரு பிரிவுகளாக்கி ஒரு பிரிவு வழியாக செல்வதற்கு ரூ.15 கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பலரும் குடும்பத்தினருடன் வருவதால் ஒரு முறை சாமி தரிசனம் செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டிய இருக்கும். இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இந்த கட்டண உயர்வு ஒரு சுமையாக இருக்கும்.
எனவே, பக்தர்கள் நலன் கருதி முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தில் தலையிட்டு பழைய கட்டணமே இருக்குமாறு செய்ய வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications