ராகுல் காந்தியின் 'விவசாயிகள் தோழன்' அவதாரம்!

உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் படும்பாட்டை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பாத யாத்திரை துவங்கியுள்ளார். நில அபகரிப்பு நடந்துள்ள பட்டா பர்சௌல் கிராமத்தி்ல இருந்து தனது யாத்திரையைத் துவங்கினார்.
வாக்காளர்கள் அதிகமுள்ள உத்தர பிரதேசத்தில் நலிந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடு்ககத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் ராகுல். 1980கள் வரை உத்தப் ரபிரதேசத்தில் காங்கிரஸ் கொடிகட்டிப் பறந்தது. அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவை ஆதிக்கம் செலுத்தத் துவங்கின. ராகுலின் பிரசாரத்தால் கடந்த 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்கள் கிடைத்து.
தற்போது முதல்வர் மாயாவதி அரசு குற்றச்சாட்டு மேல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் தான் ராகுல் மாயாவதி அரசைக் கண்டித்து பாதயாத்திரை துவங்கியுள்ளார்.
இன்று பட்டாவில் இருந்து புறப்பட்ட அவர் ரஸ்தம்பூர் மற்றும் பாய்பூரில் உள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார். கிராமம் கிராமமாக குறை கேட்கவிருக்கிறார்.
160 கிமீ நெடுஞ்சாலை அமைப்பதற்காக மாயாவதி அரசு விவசாயிகளின் நிலங்களை அபகரித்தது. இதனால் அங்கு பெரும் போராட்டம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராகுல் கூறியதாவது,
நான் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வெளி உலகத்தாருக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்கிருந்து ஆக்ரா வரை நடப்பது பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த யாத்திரை மூலம் எங்கெல்லாம் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது என்று கிராமத்தினரிடம் இருந்து தெரிந்து கொள்வேன்.
ராகுலுக்கு வழி நெடுகிலும் கிராமத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வரும் 9ம் தேதி அலிகாரில் நடக்கும் விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் ராகுல் கலந்து கொள்கிறார். ஆனால் இந்த பஞ்சாயத்துக்கு மாயாவதி அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications