டெல்லி வீட்டை காலி செய்தார் தயாநிதி-கருணாநிதியுடன் பேசினார்
டெல்லி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் தனது டெல்லி வீட்டை காலி செய்தார்.
2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ-ன் விசாரணை வளையத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயர் இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததையடுத்து அவரை உடனே பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது அவரை பதவி விலகச் சொல்லி எதிர்கட்சிகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து கூட்டத்தின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.
அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.
இந்நிலையில் தயாநிதி மாறன் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.
ராஜினாமா கடிதத்தை கொடுத்த கையோடு தனது டெல்லி வீட்டைக் காலி செய்தார் மாறன்.
மாறனை சந்தித்த திமுக அமைச்சர்கள்:
தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு திமுக அமைச்சர்கள் அவரை சந்தித்து பேசினர். திமுக அமைச்சர்கள் காந்தி செல்வன் மற்றும் ஏகேஎஸ் விஜயன் ஆகியோர் மாறனை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து சந்தித்தனர்.
கருணாநிதியுடன் பேச்சு:
தனது பதவியை ராஜினாமா செய்யும் முன் திமுக தலைவர் கருணாநிதியுடன் தயாநிதி மாறன் தொலைபேசியில் பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications