ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்பில் மரணம்

நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக அவரது வீட்டினர் தெரிவித்துள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிகிறது.
1932ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தவர் சிவத்தம்பி. கரவெட்டி மற்றும் கொழும்பில் படித்த அவர் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கண்டி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்திலும் இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. 17 ஆண்டு காலம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிவத்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார்.
பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறையில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவத்தம்பி.
அக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் சிவத்தம்பி நடித்துள்ளார்.
ஈழத் தமிழ் தொடர்பாக 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் கடந்த திமுக ஆட்சியின்போது நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார்.
84 வயதான சிவத்தம்பியின் மறைவு ஈழத் தமிழுக்கு மட்டுமல்லால், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications