நாங்குநேரி அருகே கர்ப்பிணி கழுத்தை நெறித்துக் கொன்ற கணவர் கைது
நாங்குநேரி: நாங்குநேரி அருகே கர்ப்பிணி கழுத்தை நெறித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே பரப்பாடி பக்கமுள்ள பாண்டிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மோகன்தாஸ் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர்களது திருமணத்தின்போது சுதாவின் பெற்றோர் 15 பவுன் நகை சீதனமாக கொடுப்பதாக கூறியுள்ளனர். அதில் 8 பவுன் நகையை திருமணத்தின் போதும், மீதி 7 பவுன் நகையை பின்னர் தருவதாகவும் கூறினர். ஆனால் அந்த நகையை சுதாவுக்கு அவரது பெற்றோர் போடவில்லை. இந்நிலையில் சுதா தற்போது 3 மாதம் கர்பபமாக இருந்தார்.
அந்த நேரத்தில் கணவர் மோகன்தாசுக்கு குடிபழக்கம் இருப்பது தெரிய வந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவரை சுதா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ் மனைவி சுதாவை அடித்து துன்புறுத்தினார்.
மேலும் திருமணத்துக்கு பிறகு போடுவதாக கூறிய 7 பவுன் நகை போடாதாதது குறித்துக் கேட்டும் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன்தாஸ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். போதை தலைக்கு ஏறியதும் வழக்கம்போல் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார்.
அப்போது மோகன்தாஸ் சுதாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளினார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே சுதா இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், வடக்கு விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications