இரட்டைமலை சீனவாசன் பிறந்தநாளை, அரசு விழாவாக்கிய ஜெ.வுக்கு சீமான் நன்றி
சென்னை: இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பி்ல் அதன் தலைவர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவு நீங்கவும், அவர்கள் சம உரிமை பெற்று கண்ணியமாக வாழவும் தன் வாழ் நாள் முழுவதும் போராடிய சமூகப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக நடத்தும் என்று அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சாதியம் தமிழ் மக்களின் சமூக வாழ்வை சீரழிக்கும் கொடுமையான வழக்கமாக இன்று வரை நீடித்து வருகிறது.
தமிழின ஒற்றுமைக்கும், மேம்பாட்டிற்கும் சாதிய மனப்போக்கு பெரும் தடையாகவும் இருக்கிறது. அப்படிப்பட்டக் கொடுமை கடுமையாக நடைமுறையில் இருந்த 19-வது நூற்றாண்டில் பிறந்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் இளமைக் காலந்தொட்டு போராடினார்.
'பறையர்" என்ற இதழையும், 'ஆதி திராவிட மகா ஜன சபை" என்ற அமைப்பையும் தொடங்கி தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெற போராடிய அவர், மகாத்மா காந்தியோடும், பிறகு பாபா சாகேப் அம்பேத்காருடனும் இணைந்து பணியாற்றியவர்.
அப்படிப்பட்ட உன்னதமான தலைவரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்தது மிகச் சரியான நடவடிக்கை என்பது மட்டுமின்றி, அவரைப் பற்றிய அறிதல் மூலம் சாதியத்தின் கொடுமையை இன்றைய இளைய தலைமுறையினர் அறியவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று நாம் தமிழர் கட்சி கருதுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications