அலிகாரில் இன்று ராகுல் பங்கேற்கும் மகா பஞ்சாயத்து விவசாயிகள் மாநாடு

நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ஒருவர் நீண்ட தூரம் 'நடந்தார்' என்ற பெருமையை ராகுல் காந்தி சமீபத்தில் பெற்றார். உ.பி. மாநிலத்தில் அவர் நடத்திய ஐந்து நாள் பாத யாத்திரை சுத்தமான வாக்கு வங்கி கவர்ச்சி ஆயுதமாக இருந்தாலும், அவரது பாதயாத்திரை உ.பி. விவசாயிகள் மத்தியில் பெரும் ஆர்வமாக கவனிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கிரேட்டர் நொய்டா அருகே தனது பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். கிட்டத்தட்ட 25 கிராமங்களுக்கு அவர் சென்றார். 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடையே அவர் பேசினார்.
பாதயாத்திரையின் நிறைவாக இன்று அலிகாரில் விவசாயிகள் மகா மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அலிகாரில் குவிந்துள்ளனர்.
டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் அவர்கள் அலிகாரில் வந்து குவிந்துள்ளனர். அலிகாரின் மையப்பகுதியான நிவாஸ் மைதானத்தில் இந்த மகா பஞ்சாயத்து மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு இன்னும் சில நிமிடங்களில் தொடங்குகிறது. ராகுல் காந்தியும் மேடைக்கு வந்து விட்டார். அவரது பேச்சைக் கேட்க விவசாயிகள் ஆவலுடன் காத்துள்ளனர்.
ராகுல் காந்தியின் பேச்சு உ.பி விவசாயிகளைக் கவருமா, அவர்கள், காங்கிரஸுக்கு ஆதரவாக திரும்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ராகுல் காந்தியின் இந்த மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரையும் தீவிரமாக சோதித்த பின்னரே போலீஸார் அனுப்பி வருகின்றனர்.
முன்னதாக மாநாடு தொடங்குவதற்கு முன்பு திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் அனைவரும் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் கூட்டம் கலையாமல் காத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications