மாநில, தேசிய அரசியல் குறித்து கருணாநிதி, பிரணாப் பேசிக் கொண்டனர்: தங்கபாலு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தேசிய, மாநில அரசியல் குறித்துப் பேசிக் கொண்டனர் என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியும், பிரணாப் முகர்ஜியும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது தங்கபாலுவும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியும் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த தங்கபாலு அங்கு திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கருணாநிதியும், பிரணாப் முகர்ஜியும் என்ன பேசிக் கொண்டனர் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தங்கபாலு,
பிரணாப் முகர்ஜி ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். அதன்படி இன்றும் சந்தித்து பேசினார். பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது என்றார்..
அமைச்சரவையில் 2 திமுக அமைச்சர்களை சேர்ப்பது குறித்து பேசப்பட்டதா என்று கேட்டபோது, அதுகுறித்து நான் கருத்துக் கூற முடியாது. யாரை சேர்ப்பது என்பது பிரதமரின் உரிமை. அவர்தான் முடிவு செய்வார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications