நெல்லை பல்கலை. பிஎட் சேர்க்கையில் குளறுபடி, கோடிக்கணக்கில் மோசடி
நெல்லை: நெல்லை பல்கலைக்கழக பி்எட் சேர்க்கையில் குளறுபடி நடந்துள்ளதாக தொலைநெறி மற்றும் தொடர் கல்வி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தொலைநெறி மற்றும் தொடர் கல்வி இயக்கம் சார்பில் பிஎட் படிப்பு துவங்கப்பட்டது. இதற்கு நெலலை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் பணியிலுள்ள இடைநிலை ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனால் பிஎட் படிப்பில் சேர கடந்த 2008-09-ம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்தது.
2010-11ம் ஆண்டிற்கான பிஎட் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் மற்றும் தகுதி அடிப்படையில் 500 பேர் சேர்க்கப்பட்டனர். இதற்கான இறுதி பட்டியல் 18-11-2010 அன்று வெளியிடப்பட்டது. இதில் குளறுபடி மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தொலைநெறி மற்றும் தொடர்கல்வி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று முன்தினம் தமிழக உயர்கல்வி துறை செயலாளர் கண்ணனிடம் அவர் புகார் கொடுத்துள்ளார். அதில் பிஎட் சேர்க்கையில் குளறுபடி செய்து கோடிக் கணக்கில் மோசடி நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜிலென்ஸ் மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications