ஓய்வு பெற்ற பின்னரே பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்-ராகுல்

இது குறித்து புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
நாட்டையும், அரசையும் வழி நடத்தும் பிரதமரை பதவியில் இருக்கையிலேயே லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது. பதவியில் இருந்து விலகிய பிறகு விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரலாம்.
ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் தகுதிகளை முன்னேற்றுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியேற்பு
முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப் குமார்(62) இன்று ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சரவை செயலாளர் அஜித் சேத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதீப் குமார் ஹரியானாவைச் சேர்ந்தவர். 1972-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார்.
இதற்கு முன்பு தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்து வந்த பி.ஜே. தாமஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்ததால் அவரது நியமனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தாமஸ் பதவியில் நீடிக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாமஸ் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது பதவி தானாகவே காலியானது. இதைத் தொடர்ந்து தான் தற்போது புதிய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications