சென்னையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தல்
சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையில் 10 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் காலனியைசே சேர்ந்தவர் முகமது ரபி. தள்ளு வண்டியில் சிக்கன் பக்கோடா விற்பவர். அவரது மனைவி சாய்ராபானு. அவர்களுக்கு சப்னம் பானு(2) என்கிற மகளும், ஆரிப்பாஷா(10) என்ற மகனும் உள்ளனர்.
முகமது ரபி நேற்று மாலை வழக்கம் போல பக்கோடா விற்கச் சென்றார். அவருடன் சாய்ராபானுவும் சென்றுவிட்டார். குழந்தைகளை முகமது ரபியின் தாய் பானுபீவியிடம் விட்டுவிட்டுச் சென்றனர்.
இரவானதும் ஆரிப்பாஷா தூங்கிவிட்டான். அப்போது பானுபீவி முகமது ரபியிடம் பார்சல் கட்ட பேப்பர் கொடுக்கச் சென்றார். திரும்பி வந்தபோது தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை. உடனே முகமது ரபியிடம் தெரிவித்தார். அவர் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
ரபியின் வீட்டுப் பக்கம் அடிக்கடி சுற்றும் பிச்சைக்காரனைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அதனால் பலனில்லை. இதையடுத்து போலீசார் குழந்தையைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications