திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் மகனைப் பறிகொடுத்த தந்தையின் கண்ணீர்
மும்பை: மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் தனது மகனை பறி கொடுத்து விட்டு பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது ஒரு அப்பாவிக் குடும்பம்.
எனது மகன் என்ன பாவம் செய்தான். திருமணமாகி 2 மாதங்கள்தானே ஆகிறது. அதற்குள் அவனைக் கொன்று விட்டார்களே என்று கண்ணீர் மல்கக் கேட்கிறார், ஜவேரி பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த அஸ்கர் முகம்மது என்ற 27 வயது இளைஞரின் தந்தை பயஸ் முகம்மது தபோலி.
ஜவேரி பஜார் பகுதியில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் வைர நகை தொழிலி்ல் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்தான். அவர்களில் அஸ்கரும் ஒருவர்.
அஸ்கர் குறித்து அவரது தந்தை பயஸ் கூறுகையில், எனது மகனுக்கு கல்யாணமாகி 2 மாதங்கள்தான் ஆகிறது. குண்டுவெடிப்புச் சம்பவத்தில் அவன் காயமடைந்தான் என்ற தகவல் வந்தபோது நான் வீட்டில் இருந்தேன்.
உடனடியாக சைபி மருத்துவமனைக்குச் செல்ல ஆட்டோ, பஸ் தேடினேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு அங்கு ஓடினேன். ஆனால் அதற்குள் எனது மகன் இறந்து விட்டதாக அவனது நண்பர்கள் கூறினார்கள். நான் அதிர்ந்து போய் விட்டேன்.
எனது வீட்டில் அவன் ஒருவன்தான் உழைத்து வந்தான். இன்று அவன் இல்லை. எனது மகிழ்ச்சியெல்லாம் துக்கமாக மாறி விட்டது என்றார் கண்ணீர் மல்க.
பயஸ் முகம்மது, மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு நோயாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து வரும் சமூக சேவையில் ஈடுபட்டிருப்பவராம். இதற்காக கித்மத் அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவி அவர் செயல்பட்டு வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications