காமராஜர் பிறந்தநாள்: கண்டுகொள்ளாத அதிமுக அரசு- கருணாநிதி
சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆசிரியர்கள் கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாட வேண்டும் என்று திமுகவினருக்கு அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007-2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காமராஜர் பிறந்த நாளான ஜுலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் என்ற பெயரால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டு, அவ்வாறு தொடர்ந்து வருகின்ற அரசுகளும் கொண்டாட வேண்டுமென்பதற்காக அந்த அறிவிப்பினை சட்டமாகவே இயற்றினோம். கடந்த ஆண்டு கூட, சென்னையில் காமராஜர் பிறந்த நாளை-கல்வி வளர்ச்சி நாள் என்ற பெயரில் அரசின் சார்பில் பெருவிழாவாக எடுத்து, அந்த விழாவிலே நானே கலந்து கொண்டேன்.
அந்த விழாவில் மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், மத்திய இணை மந்திரியாக இருந்த கே.வி.தங்கபாலு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அரசின் சார்பில் அமைச்சர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மட்டுமே விளம்பரமாக வந்துள்ளது.
எனவே திமுகவின் சார்பில் கழகத் தோழர்களும், முன்னணியினரும் ஆங்காங்கு காமராஜரின் சிலைகளுக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலைகளை அணிவிப்பதோடு, ஆசிரியப் பெருமக்கள் கல்வி வளர்ச்சி நாளாகவும் அதனைக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications