திருச்சியில் ரூ. 1.5 கோடி நிலத்தை அபேஸ் செய்த திமுக நிர்வாகி கைது
திருச்சி: திருச்சியில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பகுதி செயலாளர் மதிவாணனை போலீசார் கைது செய்தனர். நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்தனர்.
திருச்சி திருவானைக்காவல், சக்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (50). மலைக்கோட்டையில் சி.டி. கடை ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு ஹேமமாலினி (45) என்ற மனைவியும், 1 மகளும் உள்ளனர்.
திருச்சி சிந்தாமணி, கலைஞர் அறிவாலயம செல்லும் சாலையில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்பிளக்ஸி்ல் அவருக்கு சொந்தமாக ஒரு கடை உள்ளது.
இந்நிலையில் ஜெயசீலன் மலைக்கோட்டை பகுதி திமுக செலாளர் மதிவாணன்(40) என்பவரிடம் ரூ. 22 லட்சமும், வங்கியில் ரூ. 50 லட்சமும் கடன் வாங்கினார். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் ஜெயசீலன் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது மனைவி ஹேமமாலினி தனது பிளஸ் 1 படிக்கும் மகளுடன் தனியாக தவித்தார். கடன் தொல்லை அதிகரித்த நேரத்தில் மதிவாணன் ஹேமமாலினியிடம் சென்று அந்த கடையை ரூ. ரூ.76 லட்சத்து 62 ஆயிரத்திற்கு வாங்கிக் கொள்வதாகும், தனக்கு கொடுக்க வேண்டிய தொகையை எடுத்துக் கொண்டு, வங்கிக் கடனையும் அடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது கடந்த 2007-ம் ஆண்டு நவம்பரில் நடந்தது.
கஷ்டப்படும் வேளையில் ஆறுதலாய் பேசிய மதிவாணனை நம்பி ஹேமமாலினி கிரய ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் மதிவாணனோ 3 ஆண்டுகளாகியும் வங்கிக் கடனை அடைக்கவில்லை. இதையடுத்து ஹேமமாலினி மதிவாணனிடம் சென்று பணத்தை கொடுங்கள், இல்லையெனில் கடையை காலி செய்யுங்கள் என்று கூறி்யுள்ளார்.
அதற்கு மதிவாணன் கடையை காலி செய்ய மறுத்ததோடு ஹேமமாலினிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ஹேமமாலினி போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்தி் போலீசார் மதிவாணனை இன்று காலை கைது செய்தனர். நிலத்தை மீட்டு ஹேமமாலினியிடம் ஒப்படைத்தனர். மதிவாணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஹேமமாலினி கடையின் தற்போதைய மதிப்பு ரூ. 1.5 கோடி ஆகும். அது தெரியாமல் அவர் ரூ.76 லட்சத்துக்கு 62 ஆயிரத்துக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?










Click it and Unblock the Notifications