கேரள மாணவி பலாத்கார வழக்கு: தலைமறைவு இன்ஸ்பெக்டரின் உளவாளி யார்?
நாகர்கோவில்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு இன்ஸ்பெக்டர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் சொல்லும் போலீஸ்காரர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைப் பிடிக்க கேரள போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாணவி விபசாரத்தில் தள்ளப்பட்டு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் புகார் கூறப்பட்ட குமரி மாவட்ட இன்ஸ்பெக்டர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரது 2 செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் வேறு செல்போன் மூலம் வழக்கு தொடர்பான தகவல்களை பெற்று வருகிறார்.
அவருக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது பணிபுரிந்து வரும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கேரள போலீசாரின் நடவடிக்கைகள் சார்ந்த தகவல்களை அவ்வப்போது சேகரித்து இன்ஸ்பெக்டர் சக்திவேலிடம் ரகசியமாக தெரிவிக்கிறார். இதனால் சக்திவேல் கேரள போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பித்து வருகிறார்.
இது கேரள போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் அந்த இன்ஸ்பெக்டர் செல்போன் எண்ணையும் கண்காணித்து வருகின்றனர். இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படவோ அல்லது நீதிமன்றத்தில் சரணடையவோ வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications