நில அபகரிப்பு புகார்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு

சேலம் அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த சுமார் 24 பேரின் நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 13 பேர் அபகரித்துவி்ட்டதாக மாவட்ட கலெக்டரிடம் அந்த காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் புகார் அளித்தார்.
இதன் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுன்சிலர் பூபதி, கிருஷ்ணசாமி, உலக நம்பி, ஜிம் ராமு, சித்தானந்தம், கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஆர்.டி.ஓ. பாலகுருமூர்த்தி உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே உள்ள பிரிமீயர் மில் நிலத்தை வீரபாண்டி ஆறுமுகம் அபகரித்துக் கொண்டதாக அதன் உரிமையாளர் ரவிச்சந்திரன் சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், துரைசாமி, ஆடிட்டர் துரைசாமி, அசோக் துரைசாமி, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராமநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், அழகாபுரம் முரளி உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பான எப்.ஐ.ஆர். நகலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இதனால் இந்த வழக்குகள் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய சென்னை விரைந்துள்ளார். இன்று அல்லது நாளை இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications