நில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு சுரேஷ் உள்பட 4 பேர் கைது
மதுரை: மதுரையில் நில மோசடியில் ஈடுபட்ட திமுக மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, பொட்டு சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வேங்கடசாமி சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி. இவரது மனைவி பாப்பா. இவர்களுக்கு செங்குளத்தில் 5.14 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்பாபு, கொடி. சந்திரசேகரன், சேதுராமன் உள்ளிட்ட சிலர் தங்களை மிரட்டி நிலத்தை அபகரித்ததாக மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் சிவனாண்டியும், அவரது மனைவி பாப்பாவும் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் கோ. தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்பாபு, கொடி. சந்திரசேகரன், சேதுராமன் ஆகிய 4 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் முன்ஜாமீன் வழங்கத் தேவையில்லை என கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு கோ. தளபதி, என். சுரேஷ்பாபு, கொடி சந்திரசேகரன், சேதுராமன் ஆகியேருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதனை ஏற்று தளபதி, பொட்டு சுரேஷ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றனர். தொழி்ல அதிபர் சேதுராமன் தலைமறைவாகிவிட்டார். அந்த 3 பேரிடம் எஸ்.பி. அஸ்ரா கார்க், துணை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் திமுக நகர் செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதில் கோ.தளபதி, சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் ஆகியோர் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
முன்னதாக மத்திய அமைச்சர் அழகிரியின் விசுவாசியான மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவருமான அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டு சுரேஷ் வீடு, அலுவலகத்தில் ரெய்டு:
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரியின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ளது பொட்டு சுரேஷ் வீடு. திருப்பாளையில் உள்ள பொறியாளர் நகரில் அவரது அலுவலகம் உள்ளது.
நில மோசடி வழக்கில் கைதாகியிருக்கும் பொட்டு சுரேஷின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடிப்படை போலீசார் திடீர் என்று சோதனை நடத்தி வருகின்றனர்.
பொட்டு சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாலததால் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications