சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: 8 காங். தொண்டர்கள் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகியுள்ளனர்.
ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள அரமோராவில் நேற்று விவசாயிகள் பேரணி நடந்தது. இதில் கலந்து கொள்ள ராய்ப்பூரில் இருந்து சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நந்த் குமார் பட்டேல் தலைமையில் ஏராளமான காங்கிரசார் 25 வாகனங்களில் அரமோரா சென்றனர்.
பேரணியை முடித்துக் கொண்டு அவர்கள் இந்தகான் மற்றும் உதாந்தி இடையே சென்றபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நேற்று மாலை 6 மணி அளவில் நடந்தது. மாவோயிஸ்ட்கள் நந்த் குமார் பட்டேலின் காரை குறிவைத்தனர் ஆனால் அவர் தப்பிவிட்டார்.
இந்த தாக்குதலில் 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகினர்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர் நீரஜ் சிங் தாகூர் கூறியதாவது,
நக்சலைட்டுகள் கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தனர். பின்னர் அங்கு ஒளிந்திருந்த அவர்கள் திடீர் என்று வெளிப்பட்டு எங்கள் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றார்.
இந்த தாக்குதலில் தப்பிய காங்கிரஸ் தலைவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ராயப்பூர் சென்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications