புளியங்குடியில் பள்ளிவாசலுக்கு தீ வைப்பு: ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
புளியங்குடி: புளியங்குடியில் தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசலை தீ வைத்து எரி்த்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
புளியங்குடியில் காயிதே மில்லத் நகர் 4வது தெருவில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த 8 மாதமாக இங்கு தான் செயல்பட்டு வருகிறது. இதில் மஜ்தூர் ரஹ்மான் என்ற பள்ளிவாசல் கூரை செட்டில் இருந்தது. இங்கு தினமும் 5 வேளை தொழுகை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென இந்த பள்ளிவாசல் தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியினர் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மைக் செட், சேர்கள், மின்விசிறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் செய்யது அலி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications