அரசியல் இப்போது 'அரிசியாகி' வி்ட்டது- ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்ட பாடநூல்களை உடனடியாக வழங்க வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாதது மட்டுமின்றி, பள்ளிக் கல்வித் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்த பாடநூல்களையும் அகற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஒன்றரை மாதங்களாக பள்ளிக்குச் சென்றும் பாடம் படிக்க முடியாத மாணவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது இணையதளத்தில் உள்ள பாடங்களை படிக்கலாம் என்ற எண்ணத்துடன் இணையதளத்தை பார்த்த போது, அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றம்தான்.
சமச்சீர் கல்வி திட்டப்படியான பாட நூல்கள் கடந்த மே மாதத்திற்கு முன்பாகவே அச்சிடப்பட்டு விட்டன. தற்போது அந்தப் புத்தகங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரசு நினைத்தால் அப்பாட நூல்களை ஒரு சில மணி நேரங்களில் மாணவர்களுக்கு வழங்கிட முடியும்.
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான விஷயத்தில் கெளரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தமிழக அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து சென்னை உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது.
எனவே மாணவர்களின் பொறுமையை சோதிக்காமல் பாடப் புத்தகங்களை உடனடியாக வழங்கி சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: இளைஞர்கள் பாமகவில் இருந்தால் நமக்குத் தோல்வியே கிடையாது. எனவே அவர்களை பாமகவில் சேர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இளைஞர்களை பாமகவுக்கு இழுத்து வாருங்கள்: ராமதாஸ்
முன்னதாக காஞ்சிபுரத்தில் நடந்த மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தமிழகத்தில் பாமக தோல்வி அடைந்ததற்கு பலர் பல்வேறு காரணங்களை கூறினர். இளைஞர்கள் நம் கட்சியில் இருந்திருந்தால் இந்தத் தோல்வி நமக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக அவர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியில் இறங்குங்கள்.
தமிழ்நாட்டில் நடப்பது அரசியலே அல்ல, அரிசியல். ரூபாய்கு 3 படி அரிசி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இப்போது 20 கிலோ இலவச அரிசி என்று அரசியல் இப்போது அரிசியலாக மாறியுள்ளது.
இலவச மிக்ஸி கிரைண்டர், டி.வி. கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கல்வியும், மருத்துவமும் தவிர வேறு எதையும் இலவசமாக கொடுக்கக்கூடாது. கல்வியை இலவசமாக கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கினால், இலவசமாக கொடுக்கும் பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள்.
சங்க காலத்தில் தமிழர்கள் வீரத்துடன் போருக்கு சென்றனர். தற்போது தமிழர்கள் பாருக்கு செல்கின்றனர். கல்விக் கூடங்களை அரசு நடத்த வேண்டும். ஆனால் அது தனியாரிடம் விடப்படுகிறது.
ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதனால்தான் போருக்கு சென்ற தமிழன் பாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் பலர் நகப்புறங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications