தீபாவளி பண்டிகை: ரயில் முன்பதிவு 24-ம் தேதி துவக்கம்
நாகர்கோவில்: தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக வரும் 24-ம் தேதி ரயில் முன்பதிவு துவங்குகிறது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் முன்பதிவு செய்ய பலரும் முன்கூட்டியே தயாராவது வழக்கம். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்களில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும்.
தீபாவளிக்கு முன்னதாக வருகின்ற சனி, ஞாயிறு விடுமுறை நாட்களையும் கருத்தில் கொண்டு அக்டோபர் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்படுகிறவர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்யலாம். இதனால் வரும் நாட்களில் டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை.
விரைவில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி இயக்கப்படும்:
இந் நிலையில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில், தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷன் தெரிவித்தார்.
திருச்சி ரயில் நிலையத்தில் வியப்பூட்டும் தென் இந்திய ரயில்வே' எனும் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் புத்தகத்தை வெளியிட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷன் கூறியதாவது: சர்வதேச அளவில் மலை ரயில் என்ஜினை தயாரிக்க, 25 கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் நமது என்ஜினீயர்கள், 3 கோடி ரூபாய் செலவில் திருச்சி பொன்மலை பணிமனையில் நீலகிரி மலை ரயிலுக்கு ஒரு என்ஜின் தயாரித்து அனுப்பியுள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் 200 தடவை இயக்கப்பட்டதால், இந்த என்ஜினில் பல முறை கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்போது கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வழியில் எங்கும் நிற்காமல் இயக்க, முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
போதுமான பெட்டி வசதி இல்லாததால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயிலை தினமும் இயக்கப்பட முடியவில்லை. இந்த ஆண்டுக்குள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications