ஈடா தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு 377 ஆண்டு சிறை
மாட்ரிட்: ஸ்பெயினில் உள்ள ஈடா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் கரிகோய்ட்ஸ் அஸ்பியாசுவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 377 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள ஈடா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் கரிகோய்ட்ஸ் அஸ்பியாசு(27). அவர் மீது போர்சுகலேட் மேயர் மீது குண்டு வீசி கொலை செய்ய முயன்றது உள்பட 20 வழக்குகள் உள்ளது.
மேலும், கடந்த 2006-ம் ஆண்டு மாட்ரிட் விமான நிலையத்தி்ல கார் நிறுத்தும் இடத்தில் குண்டு வெடித்ததில் 2 யூகடார் நாட்டவர்கள் உயிர் இழந்தனர். இந்த வழக்கிலும் அஸ்பியாசுவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்குகளில் தொடர்புடைய அஸ்பியாசு ஸ்பெயினில் இருந்து தப்பித்து பிரான்ஸ் நாட்டில் பதுங்கியிருந்தார். அவரை பிரான்ஸ் போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்தனர். எனினும் கடந்த மே மாதம் தான் ஸ்பெயின் கொண்டு வரப்பட்டார்.
அவர் பிரான்ஸில் தங்கியிருந்த காலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தென்மேற்கு பிரான்சில் 2 ஸ்பெயின் போலீசாரைக் கொன்றதாக அவர் மீது பாரீஸ் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
இத்தனை வழக்குகளில் தொடர்புடைய அவருக்கு மாட்ரிட் நீதிமன்றம் 377 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications