பண மோசடி: மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் உதவியாளர் காமராஜ் கைது
விழுப்புரம்: மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி செய்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் உதவியாளர் காமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கொடுத்துள்ள புகாரில், "வண்டலூரில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறிய மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் உதவியாளர் காமராஜ் என்பவரிடமும் மற்றும் சிலரிடமும் கடந்த 2010-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ரூ. 12 லட்சம் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் கூறியபடி சீட் வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திருப்பித் தரவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காமராஜ் (49) மற்றும் அவரது கூட்டாளி கர்னல் (45) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் காமராஜ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications