குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை:ரப்பர் பால் எடுப்பு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் அடைந்துள்ளனர். பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை நீடித்ததால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications