ஊட்டியில் பயிற்சி ரத்து: திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை வீரர்கள்
ஊட்டி: ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் 25 இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படவிருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கொழும்புவுக்கு திரும்பிச் சென்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி்க் கழகத்தில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாக செய்திகள் வந்தன. இலங்கை வீரர்கள் குன்னூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இது பற்றிய தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதயைடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை குன்னூர் லெவல் கிராசிங் மற்றும் ஊட்டி-குன்னூர் ரோட்டில் உள்ள பிளாக்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர்.
போராட்டம் நடத்த முயன்ற 220 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் பலதத் பாதுகாப்பு போடப்பட்டது.
இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதா என்று பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இதனால் இலங்கை ராணுவத்தினருக்கு மைசூரில் பயி்ற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பலாம் என்ற அச்சம் பரவியதையடுத்து, நேற்று காலை 7.15 மணிக்கு இலங்கை ராணுவத்தினர் குன்னூரில் இருந்து பேருந்து மூலமாக பெங்களூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications