வாங்கிய சம்பளம் போதாமல் திருடிய ஐவர் கைது
சென்னை: சென்னையி்ல் வாங்கும் சம்பளம் போதாமல், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரி, பெரியமேடு பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகளவிலான புகார்கள் வந்தன. இதையடுத்து அப்பகுதியில், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையின் ரோந்து பணியின் போது, புரசைவாக்கம் கரியப்பா தெருவில் 2 பைக்களில் நின்ற 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், அம்பத்தூர் கங்கை நகரைச் சேர்ந்த பாவேந்தன் (24), புளியந்தோப்பை சேர்ந்த பாலாஜி(24), பட்டாளத்தை சேர்ந்த பாஸ்கர்(29), ஓட்டேரியை சேர்ந்த வினோத் (24) எழும்பூரை சேர்ந்த லாரன்ஸ்(25) என்பது தெரிந்தது.
மேலும் அவர்கள் விசாரணையில் கூறியதாவது:
நாங்கள் 5 பேரும் பிரபல வங்கி ஒன்றில், லோன் ஏஜெண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். ஆனால் வாங்கும் சம்பளம் செலவுக்கு போததாதால், 5 பேரும் சேர்ந்து, மதுரவாயல் அம்பத்தூர் ஆகிய இடங்களில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடினோம்.
அந்த மோட்டர் சைக்கள்களில் சென்று, பெரியமேடு, வேப்பேரி, திருமங்கலம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோம், எனத் தெரிவித்தனர்.
5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 20 சவரன் நகை, 2 மோட்டார் சைக்கிள் உள்ளிட்டப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications